டிரான்சில்வேனியா ஓபன் கோன்டவெய்ட் சாம்பியன்

க்ளூஜ் - நபோகா: டிரான்சில்வேனியா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் அனெட் கோன்டவெய்ட் சாம்பியன் பட்டம் வென்றார். ருமேனியாவில் நடந்த இத்தொடரின்  பைனலில் முன்னாள் நம்பர் 1 வீராங்கனையும் உள்ளூர் நட்சத்திரமுமான சிமோனா ஹாலெப் (30வயது, 15வது ரேங்க்), எஸ்டோனியாவின் அனெட் கோன்டவெய்ட் (25 வயது, 23வது ரேங்க்) மோதினர்.

தொடரின் முதல்நிலை வீராங்கனை என்பதாலும், உள்ளூரில் போட்டி நடப்பதாலும் ஹாலெப் எளிதில் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அபாரமாக விளையாடிய கோன்டவெய்ட் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை முத்தமிட்டார். இப்போட்டி 1 மணி, 10 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. நடப்பு சீசனில் அவர் வென்ற 4வது சாம்பியன் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

டிரான்சில்வேனியா ஓபன் தொடங்குவதற்கு முன் தரவரிசையில் 23வது இடத்தில் இருந்த கோன்டவெய்ட் 8வது இடத்துக்கு முன்னேறியதுடன், ஆண்டு இறுதி டபுள்யுடிஏ பைனல்ஸ் தொடரில் விளையாடவும் தகுதி பெற்றார். ஹலெப் 15வது இடத்தில் இருந்து 22வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்த ஆண்டு தொடக்கத்தில் அவர் 3வது இடத்தில் இருந்தார்.

Related Stories: