ஆவின் வரலாற்றில் முதல் முறையாக ஒரே நாளில் 3 கோடிக்கு தீபாவளி இனிப்பு விற்பனை: அமைச்சர் நாசர் தகவல்

திருச்சி: தீபாவளி இனிப்பு வகைகள் தயாரிப்பு ஆவின் வரலாற்றில் ஒரே நாளில் ரூ.3 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார்.திருச்சியில் நேற்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் அளித்த பேட்டி: பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கான நிலுவையில் உள்ள பணம் பட்டுவாடா செய்யப்படுவது ஒவ்வொரு வருடமும் நடப்பது வழக்கம். தீபத்திருநாளை முன்னிட்டு, தற்போது தமிழகம் முழுவதும் வழங்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. பால்வளத்துறையில் முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கறந்த பால், கறந்தபடி தாய்ப்பால் போன்று சுத்தமான பாலில், கூட்டுறவு சங்கத்தில் இருந்து பெற்றப்பட்ட பொருட்கள், ராஜஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யப்பட்டு தீபாவளி இனிப்பு வகைகள் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். நேற்று (நேற்றுமுன்தினம்) ஒரே நாளில் சென்னையில் மட்டும் ரூ.3 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது. இது ஆவின் வரலாற்றில் அதிகம். வரக்கூடிய நாட்களில் விற்பனை அதிகரித்து 1,500 டன் விற்பனை செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். கடந்த 10 ஆண்டில் கிடப்பில் போடப்பட்ட இந்த துறையில் தற்போது மீண்டும் வெளிநாடுகளில் விற்பனையை துவக்கி உப பொருட்களை அனுப்பி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: