திருவேற்காட்டில் ரூ.69.98 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள்: அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

பூந்தமல்லி: திருவேற்காட்டை அடுத்த அயனம்பாக்கத்தில் ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளி உள்ளது. இங்கு  புதிதாக கட்டப்பட்ட ரூ. 69.98 லட்சம் மதிப்பீட்டில் அரசு பள்ளி கட்டிட 4 புதிய வகுப்பறை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், பால் வளத்துறை அமைச்சர் நாசர் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தனர். தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாணவர்களை கவரும் வண்ணம் பள்ளி கட்டிடம் முழுவதும் நவீனமாக வண்ணங்கள், ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தது.  மேலும், மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் படங்களுடன் வாக்கியங்கள் எழுதப்பட்டிருந்தது.  தனியார் பள்ளிகளுக்கு நிகராக விளையாட்டு மைதானமும் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ், பூந்தமல்லி எம்.எல்.ஏ.கிருஷ்ணசாமி, திருவேற்காடு நகராட்சி ஆணையர் வசந்தி,  திருவேற்காடு நகர திமுக செயலாளர் மூர்த்தி, மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>