சங்கராபுரத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்து: உரிமையாளர் மாவட்ட செயலாளரான செல்வ கணபதி மீது வழக்கு பதிவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக கடை உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பட்டாசு கடையில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ள நிலையில் கடை உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சங்கராபுரத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பட்டாசு கடையில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதில் அருகில் இருந்த பேக்கரி, செல்போன் கடை உள்ளிட்ட கடைகளில் தீ மளமளவென பரவி பேக்கரி கடையில் இருந்த சுமார் 4க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறியது.

இந்த துயர சம்பவத்தில் ஒரு சிறுவன் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையில் இந்த விபத்திற்கான காரணம் குறித்து காவல் துறையினர் தடவியல் நிபுணர்களின் மூலம் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் பட்டாசுக்கடை உரிமையாளரான கள்ளக்குறிச்சி பாஜக மாவட்ட செயலாளரான செல்வ கணபதி மீது பட்டாசு கடையில் அரசு அனுமதியை மீறி அதிக அளவில் பட்டாசுகளை வைத்திருந்தது மற்றும் விபத்திற்கு காரணமானவர் என்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் தற்போது விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளரான செல்வ கணபதி விபத்தில் படுகாயமடைந்து தற்போது கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இந்த விபத்து குறித்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories:

More
>