நேருக்கு நேர்

ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் இதுவரை 16 சர்வதேச டி20 ஆட்டங்களில்  மோதியுள்ளன. அவற்றில இரு அணிகளும் தலா 8 ஆட்டங்களில் வென்று சம பலத்தை நிரூபித்து உள்ளன.

இந்த 2 அணிகளும் மோதிய ஆட்டங்களில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியா 263ரன்னும், இலங்கை 198ரன்னும் குவித்துள்ளன. குறைந்தபட்சமாக ஆஸ்திரேலியா 102ரன்னிலும், இலங்கை 87ரன்னிலும் இன்னிங்சை முடித்துள்ளன.

* டி20 உலக கோப்பையில்...

ஐசிசி டி20 உலக கோப்பையில்  ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் 3 முறை மட்டுமே மோதியுள்ளன. அவற்றில் ஆஸ்திரேலியா 2 ஆட்டங்களிலும், இலங்கை ஒரு ஆட்டத்திலும் வெற்றி கண்டுள்ளன. இந்த  ஆட்டங்களில் அதிகபட்சமாக ஆஸ்திரலேியா 168ரன்னும், இலங்கை 160ரன்னும் குவித்திருக்கின்றன. குறைந்தட்சமாக  ஆஸ்திரலேியா 102ரன்னிலும், இலங்கை 87ரன்னிலும் சுருண்டு இருக்கின்றன.

* நடப்புத் தொடரில்....

ஆஸ்திரேலியா: அக்.23ம் தேதி நடந்த சூப்பர்-12 முதல் ஆட்டத்தில்  தென் ஆப்ரிக்காவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இலங்கை: தகுதிச் சுற்றில் நமீபியா, அயர்லாந்து, நெதர்லாந்து அணிகளை வீழ்த்தி இலங்கை, சூப்பர்-12க்கு முன்னேறியது. தொடர்ந்து சூப்பர்-12 சுற்றில் தனது முதல் ஆட்டத்தில்  வங்கதேசத்தை  5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

Related Stories: