முன்னாள் அமைச்சர் சரோஜா மீது ரூ.75 லட்சம் மோசடி வழக்கு: குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

ராசிபுரம்: கடந்த அதிமுக ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சர் மற்றும் ராசிபுரம் சட்ட மன்ற உறுப்பினராகவும் இருந்த சரோஜா இவர் ராசிபுரத்தை சேர்ந்த குணசீலன் என்பவருடைய மனைவி கலாநிதிக்கு அங்கன்வாடியில் வேலை வாங்கி தருவதாக ரூ.75 லட்சம் மோசடி செய்ததாக கூறி முன்னாள் அமைச்சர் சரோஜா மீது குணசீலன் நாமக்கல் மாவட்டம் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் முன்னாள் அமைச்சர் சரோஜா மீது 406, 420, 506/1 ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அமைச்சர் சரோஜா மீது இது போன்ற குற்றசாட்டுகள் எழுந்துள்ளதால் குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

More
>