கலவை முதல் ராணிப்பேட்டை வரை 27 ஆயிரம் விதை பந்துகள் வீசப்பட்டன

கலவை :  கலவை முதல் ராணிப்பேடடை வரை 27 ஆயிரம் விதைபந்துகள் வீசும் பணியில் மாணவர்களுடன் இயற்கை ஆர்வலர் ஈடுபட்டார்.  

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அடுத்த வாழைப்பந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் நம்மாழ்வார் இயற்கை ஆர்வலர் நடராஜன். இவர் 5,  9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுடன் குழுவாக இணைந்து. சாலையோரங்களில் மரக்கன்று நடுவதும், ஏரிப்பகுதியில்  கரைகளை பலப்படுத்த பனை விதைகள் விதைப்பது போன்ற இயற்கை சார்ந்த செயல்களை தொடர்ந்து 4 ஆண்டுகளாக செய்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று  ஏரிப்பகுதிகள்  மற்றும் சாலையோரங்கள், ஆற்றுப்பகுதிகள் என  அனைத்து இடங்களிலும்  காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை  நாவல், வேம்பு, இளுப்பை, மலைவேம்பு, புளியன், பூவரசு, ஜப்தாலி உள்ளிட்ட மரக்கன்றுகளை நட்டனர். மேலும், மாவட்டத்தை பசுமையாக்கும் நோக்கத்தோடு 27,300 விதைபந்துகளை  கலவை முதல் ராணிப்பேட்டை வரை சாலையின் இருபுறமும் வீசினர்.

Related Stories: