தமிழகத்திற்கு 90,000 மெட்ரிக் டன் யூரியா உரம் ஒதுக்கீடு: மத்திய அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்துக்கு 90,000 மெட்ரிக் டன் யூரியா உரத்தை ஒதுக்கீடு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதை தொடர்ந்து யூரியா உரத்தை ஒதுக்கி மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட யூரியா உரம் காரைக்கால் துறைமுகத்துக்கு விரைவில் வர உள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. காரைக்காலில் இருப்பில் உள்ள 4,000 மெட்ரிக் டன் யூரியா ரயிலில் தமிழகத்தின் மாவட்டங்களுக்கு அனுப்பப்படும். அக்டோபர் இறுதிக்குள் ஸ்பிக் 10,000 மெட்ரிக் டன், எம்எப்எல் நிறுவனம் 8,000 மெட்ரிக் டன் யூரியாவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

Related Stories: