ஆரணியாற்றின் குறுக்கே கட்டப்படும் மேம்பாலம், தரைப்பால பணியை எம்எல்ஏ ஆய்வு: விரைந்து முடிக்க உத்தரவு

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை ஆரணியாற்றின் குறுக்கே ரூ.27 கோடி செலவில் கட்டப்படும் மேம்பாலப்பணிகளை ஆய்வு செய்த டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் நெடுஞ்சாலையில் ஆரணியாற்றின் குறுக்கே ரூ.27 கோடியில் மேம்பாலம் கட்டும் பணிகள் கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் - செப்டம்பர் மாதத்தில் நடைபெற்று வருகிறது. இந்த பாலத்தை 18 மாதங்களில் முடிக்க வேண்டும். ஆனால், காலதாமதமானது. பின்னர், கொரோனா நோய் தொற்றால் ஊரடங்கு தொடங்கியது.  இதனால் சில மாதங்கள் பணிகள் பாதிக்கப்பட்டது.

பின்னர் மீண்டும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், பிச்சாட்டூர் ஏரி திறக்கப்பட்டதால் தரைப்பாலம் சேதமடையும் சூழ்நிலை இருந்தது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ நேற்று திடீரென இந்த மேம்பால பணிகளை நேரில் ஆய்வு செய்தார். அப்போது, மேம்பாலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் தரைப்பால கட்டுமான  பணிகளையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, தலைமை செயற்குழு உறுப்பினர் பி.ஜெ.மூர்த்தி,  பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் டி.கே.சந்திரசேகர், பேரூர் செயலாளர் அப்துல் ரஷீத் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்,  திமுகவினர் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: