2 டோஸ் தடுப்பூசி போட்ட வெளிநாட்டு பயணிகள் அமெரிக்கா பறக்கலாம்: அடுத்த மாதம் 8 முதல் அமல்

வாஷிங்டன்: அமெரிக்கா செல்லும் இந்தியர்கள் உட்பட வெளிநாட்டு பயணிகளுக்கு நவ.8 முதல் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படுவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. அமெரிக்க செல்லும் வெளிநாட்டு பயணிகள் மற்றும் அந்நாட்டு மக்களுக்காக புதிய பயண வழிகாட்டுதலை வெள்ளை மாளிகை நேற்று வெளியிட்டுள்ளது. அதில், ‘அமெரிக்க குடிமகன் அல்லது குடிமகன்கள் அல்லாத வெளிநாட்டு பயணிகள் அமெரிக்கா வருவதற்கு ஒரு நாளைக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும். 2 டோஸ் முழுமையாக தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

அதற்காக, சுகாதார துறை அல்லது அந்நாட்டு அரசு அளித்த சான்றிதழை ஆதாரமாக காண்பிக்க வேண்டும். தொற்று பாதித்தவர்களுக்கு கண்காணிப்பு, மாஸ்க் அணிதல் போன்ற அடிப்படை விதிமுறைகள் அமலில் இருக்கும். நவ.8ம் தேதி முதல் அமெரிக்கர்கள் அல்லாத குடிமகன்கள், இட ம்ெபயர்ந்தோர் ஆகியோர் விமான பயணம் மேற்கொள்வதற்கான தடை முழுமையாக நீக்கப்படுகிறது. ஆனால், இவர்கள் 2 டோஸ் முழுமையாக தடுப்பூசி செலுத்தி கொண்டிருக்க வேண்டும். பயணத்துக்கு முன்பு ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும். இந்த விதிமுறைகள் அனைத்து நாட்டு பயணிகளுக்கும் பொருந்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: