தேசிய நீச்சல் போட்டி: நடிகர் மாதவன் மகன் 7 பதக்கம் வென்றார்

சென்னை: நடிகர் மாதவனின் மகன் வேதாந்த், தேசிய நீச்சல் போட்டியில் 7 பதக்கங்களை வென்றுள்ளார். மாதவனின் மகன் வேதாந்த், நீச்சல் விளையாட்டு வீரர். இந்திய அளவில் நடைபெற்ற பல போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்கள் பெற்றிருக்கிறார். இந்நிலையில், சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்ற 47வது ஜூனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்ட வேதாந்த் 7 பதக்கங்களை பெற்றுள்ளார். இதையடுத்து மாதவனின் மகனுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Related Stories:

More
>