சோளிங்கர் அடுத்த கல்பட்டு கிராமத்தில் குப்பைக்கழிவுகளை கொட்டுவதால் மாசடையும் ஏரி-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சோளிங்கர் : சோளிங்கர் அடுத்த கல்பட்டு கிராமத்தில் குப்பைக்குழிவுகளை கொட்டி வருவதால் ஏரியானது மாசடைந்து வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சோளிங்கர் அடுத்த சோமசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்பட்டு கிராமத்தில் சிறிய ஏரி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பெய்யாததால் நீர்வரத்து இல்லாமல் ஏரி வறண்டு காணப்பட்டது. குடிநீர் பஞ்சமும் ஏற்பட்டது. மேலும், கிராமத்தில் சேகரிக்கப்படும் குப்பைக்கழிவுகளை ஊராட்சி துப்புரவு பணியாளர்கள், இந்த ஏரியில் கொட்டி வந்தனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, கல்பட்டு ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏரியானது தற்போது நிரம்பும் தருவாயில் உள்ளது.

இதற்கிடையில், ஏரியில் கொட்டிய குப்பைக்கழிவுகள் நீரில் மிதந்து துர்நாற்றம் வீசுகிறது. தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. அதேபோல், ஏரியில் ஆழ்துளைக்கிணறு உள்ளதால் குடிநீரும் மாசடையும் நிலை உள்ளது என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.எனவே, ஏரியில் குப்பைக்கழிவுகளை கொட்டுவதை தடுக்க வேண்டும். ஏற்கனவே கொட்டியுள்ள குப்பைக்கழிவுகளை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: