சென்னையில் 100 ரூபாயை கடந்து விற்பனையாகும் பெட்ரோல், டீசல்... வாகன ஓட்டிகள் கலக்கம்

சென்னை: சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 104.52 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 100.59 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினமும் எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு மாற்றி அமைத்து வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து இந்த நடைமுறை அமலில் உள்ளது. கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது.

நடப்பு மாதத்தில் கடந்த 1ம் தேதியில் இருந்து நேற்று வரை (4,18,19ம் தேதி தவிர) 21 நாட்கள் விலையேற்றப்பட்டுள்ளது. சென்னையில் நேற்றைய தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் 30 காசு உயர்ந்து ரூ.104.52க்கு விற்கப்பட்டது. டீசல் விலை 33 காசு உயர்ந்து ரூ.100.58க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி அதே விலையில் நீடிக்கிறது. பெட்ரோல், டீசலின் தொடர் விலையேற்றத்தால், லாரி வாடகை, ஆட்டோ கட்டணம் உயரும் அபாயம் ஏற்பட் டுள்ளது.

வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை பொருட்கள் விலை உயர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தும் ஒன்றிய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: