முறையே 30, 33 காசு உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை 21வது நாளாக அதிகரிப்பு

சேலம்: பெட்ரோல், டீசல் விலை கடந்த 1ம் தேதியில் இருந்து நேற்று 24ம் தேதி வரை (4,18,19ம் தேதி தவிர) 21 நாட்கள் விலையேற்றப்பட்டுள்ளது. நேற்றைய தினம் நாடு முழுவதும் பெட்ரோல் 30காசும், டீசல் 33 காசும் அதிகரிக்கப்பட்டது. இதனால், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 30 காசு உயர்ந்து ரூ.104.52க்கும், டீசல் விலை 33 காசு உயர்ந்து ரூ.100.58க்கும் விற்பனையாகிறது. சேலத்தில் பெட்ரோல் ரூ.104.54ல் இருந்து 30 காசு அதிகரித்து ரூ.104.84 ஆகவும், டீசல் ரூ.100.60ல் இருந்து 33 காசு அதிகரித்து ரூ.100.93 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நாட்டிலேயே அதிகபட்சமாக மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.116ஐ தாண்டி விட்டது. மும்பையில் பெட்ரோல் விலை ரூ.113.46க்கும், கொல்கத்தாவில் ரூ.108.11க்கும், டெல்லியில் ரூ.107.59க்கும் விற்பனையாகிறது.  பெட்ரோல், டீசலின் தொடர் விலையேற்றத்தால், அத்தியாவசிய பொருட்கள் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தவேண்டும் என ஒன்றிய அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: