கொடை அருவிகளில் கொட்டுது தண்ணீர்

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக மிதமான மழை, அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பெய்த மழையின் அளவு நேற்று முன்தினம் 43 மிமீ பதிவான நிலையில் நேற்றும் 20 மிமீ ஆக பதிவாகியது. இதனால் கொடைக்கானலில் உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி, தலையாறு அருவி (எலி வால் அருவி) உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தொடர்மழையால் முக்கிய சாலைகளில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்திற்கு இடையூறும் ஏற்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு கொடைக்கானல் டம்டம் பாறை அருகே பாறைகள் சரிந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து தடைபட்டது.

 அதேபோல் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியின் சில இடங்களில் சாலையோரம் மண் சரிந்து விழுந்ததால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது. கொடைக்கானல் இந்திரா நகர் பகுதியில் தாங்கு சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு வீடு முற்றிலும் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக வீட்டிலிருந்தவர்கள் உயிர் தப்பினர். எனவே கொடைக்கானல் மலைச்சாலையில் சுற்றுலா பயணிகள் இரவு நேர பயணங்களை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories:

More
>