காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி 70வது பிறந்தநாள் ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

சென்னை:  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் 70வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு காங்கிரசார் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அவரது பிறந்தநாளை முன்னிட்டு, அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், ஸ்ரீவல்ல பிரசாத், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில ெசயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட தலைவர்கள் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழக காங்கிரஸ் சார்பில் சத்தியமூர்த்தி பவனில் கே.எஸ்.அழகிரி பிறந்த நாள் விழா நடந்தது. விழாவுக்கு மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் தலைமை வகித்தார். இதில் அழகிரியின் 70வது பிறந்தநாளை குறிக்கும் வகையில் 70 கிலோ கொண்ட பிரமாண்ட கேக் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு, டாக்டர் செல்லக்குமார் ஆகியோர் முன்னிலையில் வெட்டப்பட்டடது. தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. 70வது பிறந்தநாளை குறிக்கும் வகையில் 70 பயனாளிகளுக்கு தையல் இயந்திரம், 70 காஸ் அடுப்பு, 70 மிக்சி, 70 குக்கர் மற்றும் 2000 பேருக்கு இலவச சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து உணவு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் காங்கிரஸ் அகில இந்திய செயலாளர் சி.டி.மெய்யப்பன், தமிழக காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹசண் ஆரூண் எம்எல்ஏ, மாநில துணை தலைவர்கள் கோபண்ணா, பொன் கிருஷ்ணமூர்த்தி, தாமோதரன், பொது செயலாளர்கள் ரங்கபாஷ்யம், எஸ்.ஏ.வாசு, சிரஞ்சீவி மற்றும் கொட்டிவாக்கம் முருகன், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவராஜசேகரன், நாஞ்சில் பிரசாத், அடையாறு துரை, முத்தழகன், டெல்லிபாபு மற்றும் செயற்குழு உறுப்பினர் சுமதி அன்பரசு, அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி சர்க்கிள் தலைவர்கள் ஆர்.முரளிகிருஷ்ணன், சூளைமேடு எம்.ரியாஸ், எம்.ஆர்.ஏழுமலை, டி.வி.துரைராஜ், மலர்கொடி, மயிலை தரணி, திருவான்மியூர் மனோகரன், எஸ்.எஸ் குமார், எம்எம்டிஎ. கோபி உள்ளிட்ட  ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>