வாழ்த்துக்கள் இந்தியா என டிவிட்டரில் டிபி மாற்றிய பிரதமர் மோடி : எதுக்கு தெரியுமா ?

டெல்லி : நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை கடந்த ஜனவரி 16ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக, கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த சுகாதார ஊழியர்களுக்கும், பிப்ரவரி 2ம் தேதி முதல் முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. தற்போது, 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வயதினருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில், முதல் 85 நாளில் 10 கோடி, அடுத்த 45 நாளில் 20 கோடி, அடுத்த 29 நாளில் 30 கோடி, அடுத்த 24 நாளில் 40 கோடி, அடுத்த 20 நாளில் 50 கோடி டோஸ் என இந்த இலக்கு ஆகஸ்ட் 6ம் தேதி எட்டப்பட்டது. அதன்பின், அடுத்த 76 நாட்களில் 100 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த இலக்கு மொத்தத்தில் ஒன்பது மாதங்களில் எட்டப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் தகுதியுடைய 75 சதவீதத்தினருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 31 சதவீதத்தினருக்கு 2 டோஸ் தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே அதிகளவு தடுப்பூசி போட்ட முதல் 5 மாநிலங்கள் பட்டியலில், உத்தர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் 2வது மற்றும் 3வது இடத்திலும், குஜராத், மத்திய பிரதேசம் முறையே 4வது, 5வது இடத்தில் உள்ளன. இந்நிலையில், 100 கோடி டோஸ் கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ள புதிய மைல்கல்லை அடைந்ததை குறிக்கும் விதமாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், தனது டிபி எனப்படும் சுயவிவரப் படத்தை மாற்றியுள்ளார். இந்த சுயவிவரப் படமானது, கோவிட் தடுப்பூசி குப்பியுடன் வாழ்த்துகள் இந்தியா எனக் குறிப்பிடும் வகையில் உள்ளது.

Related Stories: