பர்கூர் மலைப்பகுதியில் இரவு பெய்த கன மழையால் மண்சரிவு;மண் சரிவின் காரணமாக போக்குவரத்துக்கு முற்றிலுமாக துண்டிப்பு

பர்கூர்:ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் இரவு பெய்த கன மழையால் பர்கூர் செல்லும் மலை பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. செட்டினுடி மற்றும் இரண்டாவது கொண்டை ஊசி வளைவு அருகே மிகபெரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக அந்தியூர், பர்கூர் சாலை முற்றிலுமாக துண்டிக்கபட்டுள்ளது. மேலும் சுமார் 10ற்கும் மேற்பட்ட இடங்களில் அங்கங்கே சிறியளவு மண்சரிவு ஏற்பட்டு சிறிய சிறிய பாறைகள் மற்றும் மரங்கள் சாலையின் நடுவே விழுந்து கிடக்கின்றன.

மண் சரிவின் காரணமாக போக்குவரத்துக்கு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டிருப்பதால் அந்தியூரிலிருந்து பர்கூர் மலைப்பாதையிலுள்ள மலை கிராமங்களுக்கும் மேலும் கார்நாடக மாநிலம் கொள்ளைக்கால், ராமாபுரம் உள்ளிட்ட இடங்களுக்கும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.மண்சரிவால் வரட்டுப்பள்ளம் அணைப்பகுதியில் உள்ள வனசோதனை சாவடியில் வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கின்றன. இதேபோன்று  மறுபுறம் பர்கூர் காவல் நிலைய சோதனை சாவடியில் வண்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் இரவு நேரம் பயணம் செய்த வண்டிகள் அங்கங்கே மலைப்பாதையில் நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சாலை நடுவே கிடக்கும் மரங்களை அகற்றும் பணியில் காவல்துறையினரும் வனத்துறையினரும் ஈடுபட்டுள்ளனர். சாலையில் உள்ள பாறைகள் மற்றும் மண்ணை அகற்ற பொக்லைன் இயந்திரம் பயன்படுத்தபட உள்ளது.

Related Stories: