தங்கம் விலை சவரனுக்கு 104 அதிகரிப்பு

சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு 104 அதிகரித்தது. அதே நேரத்தில் தங்கம் விலை மீண்டும் 36 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.தங்கம் விலை கடந்த 4 மாதத்திற்கும் மேலாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது. சில சமயங்களில் அதிரடியாக உயர்ந்தும் வந்தது. இந்நிலையில் கடந்த 16ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு 50 குறைந்து ஒரு கிராம் 4,465க்கும், சவரனுக்கு 400 குறைந்து ஒரு சவரன் 35,720க்கும் விற்கப்பட்டது. 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. 18ம் தேதி கிராமுக்கு 9 குறைந்து ஒரு கிராம் 4,456க்கும், சவரனுக்கு 72 குறைந்து ஒரு சவரன் 35,648க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து 2 நாட்களில் தங்கம் சவரன் 472 குறைந்தது. இந்த விலை குறைவு நகை வாங்குவோரை சந்தோஷத்தில் ஆழ்த்தியிருந்தது.

இந்நிலையில் 19ம் தேதி கிராமுக்கு 28 அதிகரித்து ஒரு கிராம் 4,484க்கும், சவரனுக்கு 224 அதிகரித்து ஒரு சவரன் 35,872க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் கிராமுக்கு 15 குறைந்து ஒரு கிராம் 4,469க்கும், சவரனுக்கு 120 குறைந்து ஒரு சவரன் 35,792க்கும் விற்கப்பட்டது. நேற்று தங்கம் விலை அதிகரித்து காணப்பட்டது. அதாவது, கிராமுக்கு 13 அதிகரித்து ஒரு கிராம் 4,482க்கும், சவரனுக்கு 104 அதிகரித்து ஒரு சவரன் 35,856க்கும் விற்கப்பட்டது. மீண்டும் தங்கம் விலை சவரன் 36 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

Related Stories: