விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்துக்கான ஆணை: எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் வழங்கினார்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையத்தில் உள்ள எம்எல்ஏ அலுவலக வளாகத்தில் விவசாயிகளுக்கான இலவச மின்சார இணைப்புகான ஆணை மற்றும் வாரிசுதாரருக்கு பணி ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கும்மிடிபூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் பி.ஜெ.மூர்த்தி, மாவட்ட பிரதிநிதி ரவிக்குமார், வக்கில் சீனிவாசன், மின்வாரிய செயற்பொறியாளர் கனகராஜ், உதவி செயற்பொறியாளர்கள் பாலச்சந்திரன் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்திற்கான இணைப்பு ஆணை 5 நபர்களுக்கும், கருணை அடிப்படையில் ஒருவருக்கு பணி நியமன ஆணை ஆகியவைகளை எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் வழங்கினார். 

Related Stories:

More
>