இலங்கைக்கு கடத்த பதுக்கிய 300 கிலோ கடல் அட்டை பறிமுதல்

ராமேஸ்வரம்: இலங்கைக்கு கடத்துவதற்காக ராமேஸ்வரம் கடற்கரையில் பதுக்கி வைத்திருந்த 300 கிலோ கடல் அட்டைகளை மரைன் போலீசார் கைப்பற்றினர். ராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தி செல்ல கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ராமேஸ்வரம் மரைன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ராமேஸ்வரம் கடற்கரையோர பகுதியில் மரைன் போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

சேராங்கோட்டை கடற்கரை பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 கிலோ கடல் அட்டைகளை மரைன் போலீசார் கைப்பற்றினர். விசாரணையில், இலங்கைக்கு கடத்தி செல்ல மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. கடல் அட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக பூபதி என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

More
>