செய்யாறு அடுத்த சுமங்கலி கிராமத்தில் 10ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா சுமங்கலி கிராமத்தில் சுமங்கலி நாயகி சமேத சத்தியநாதீஸ்வரர் கோயில் உள்ளது. இதனருகில் முட்புதர்களிடையில் பழைய கட்டுமான கற்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. அவற்றிலிருந்து ஆயிரம் ஆண்டு பழமையான கல்வெட்டு ஒன்றினை வரலாற்று ஆய்வாளரும், தொல்லியல் ஆர்வலருமான எறும்பூர் கை.செல்வகுமார் கண்டெடுத்தார்.

இதனை ஆய்வு செய்த அவர் கூறுகையில், ‘‘புராதன சின்னமாக இருந்த சுமங்கலி நாயகி சமேத சத்தியநாதீஸ்வரர் கோயில் முழுவதும் சிதைந்த நிலையில் 1988ல் புதிதாக கட்டப்பட்டுள்ளது. அதில் கல்வெட்டுகள் அடங்கிய கற்கள் சுற்றுச்சுவரில் வைத்து கட்டப்பட்டிருந்தன. மேலும் கோயிலைச்சுற்றி ஆய்வு செய்ததில் பழைய கட்டுமான கற்குவியலுக்கிடையில் ஒரு கல்வெட்டு இருந்ததை அறிய முடிந்தது. அதை ஆய்வு செய்ததில் அதன் எழுத்து வடிவம் கொண்டு கி.பி.10ம் நூற்றாண்டை சேர்ந்தது என தெரிய வருகிறது’’ என்றார்.

Related Stories: