சாலைகளில் திரிந்த மாடுகளை பிடித்த நகராட்சி ஊழியர்கள்-உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பு

காரைக்கால் :  காரைக்கால் மாவட்டத்தில் ஆடு, மாடு, குதிரை, பன்றி போன்றவை சாலைகளில் சுற்றித் திரிந்து வருகின்றன. இதனால் வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே வளர்ப்பு பிராணிகளை  தங்கள் சொந்த இடத்தில் வைத்து பராமரிக்கும் படியும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் பட்சத்தில் அவைகளைப் பிடித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க  காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா  உத்தரவு பிறப்பித்திருந்தார்.  

 இந்நிலையில்  காரைக்காலின் முக்கிய சாலைகளான காமராஜர் சாலை, பிகே சாலை, சந்தைத்திடல் போன்ற இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் மாடுகளையும், மற்ற பிராணிகளையும் வெளியே திரியவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய காரணத்தால் நகராட்சி ஆணையர் காசிநாதன் ஆணையின்படி  ராஜ்குமார் மற்றும் நகராட்சி ஊழியர்கள் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை  பிடித்து நகராட்சிக்கு உட்பட்ட இடத்தில் அடைத்தனர்.

பின்னர் இதுகுறித்து நகராட்சி ஆணையர் தெரிவிக்கையில், பிடிபட்ட ஒவ்வொரு மாட்டிற்கும் தலா ரூ.3 ஆயிரம் வீதம் அதன் உரிமையாளர்களுக்கு  அபராதம் விதிக்கப்படும்.  அவர்களிடம் இனி இதுபோல் தவறு செய்ய மாட்டோம். கையக பத்திரம் எழுதி வாங்கிய பின்னரே அவை உரியவர்களிடம்   ஒப்படைக்கப்படும். இதையும் மீறினால் சம்பந்தப்பட்ட பிராணிகளை பிடித்து சந்தை ஏலத்தில் விடப்படும் என்றார்.

Related Stories: