உள்ளாட்சி தேர்தலில் 381 பாஜகவினர் வெற்றி : பாஜக மீது நம்பிக்கை வைத்த தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு நன்றி தெரிவித்தார் பிரதமர் மோடி!!

டெல்லி: தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பாஜகவினருக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் கடந்த அக்.6,9ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 12ம் தேதி நடந்தது. இதையடுத்து, வெற்றி பெற்றவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சான்றிதழ்கள் வழங்கினர். இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட 27 ஆயிரம் உள்ளாட்சி பிரதிநிதிகள் இன்று பதவியேற்கின்றனர்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில், பாஜக  சார்பில் போட்டியிட்டவர்களில், 332 வார்டு உறுப்பினர்கள்; 41 பஞ்சாயத்து தலைவர்கள்; எட்டு ஒன்றிய கவுன்சிலர்கள் என மொத்தம், 381 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பாஜகவினருக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள்  கட்சிக்காரர்களை நான் வாழ்த்த விரும்புகிறேன்.  எங்கள் மீது நம்பிக்கை வைத்த தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு நன்றி.அருமையான தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உழைப்போம், என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>