உ.பி. சட்டமன்றத்தின் துணை சபாநாயகராக நிதின் அகர்வால் தேர்வு

லக்னோ: உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ ஆட்சி நடந்து வருகிறது. இங்கு சட்டப்பேரவைத் தலைவராக ஹிர்டே நாராயண் திக்ஷித் இருந்து வருகிறார். துணை சபாநாயகரைத் தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு சட்டமன்றத்தில் நேற்று நடந்தது. இதில் மொத்தம் 368 வாக்குகள் பதிவாகின. இவற்றில் 4 செல்லாததாக அறிவிக்கப்பட்டன. இதில் ஹர்டோய் தொகுதியில் இருந்து 3வது முறையாக வெற்றி பெற்ற பாஜ எம்எம்ஏவும் முன்னாள் மாநில அமைச்சர் நரேஷ் அகர்வாலின் மகனுமான நிதின் அகர்வால் 304 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த நரேந்திர வர்மாவுக்கு 60 வாக்குகள் மட்டும் கிடைத்தது. இதனால் 244 வாக்குகள் வித்தியாசத்தில் நிதின் அகர்வால் வெற்றி பெற்றார். எதிர்க்கட்சிகளான பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் இத்தேர்தலை புறக்கணித்தனர்.

Related Stories: