மயிலாடுதுறையில் நகரப் பகுதியில் கொட்டப்படும் குப்பையால் கடும் துர்நாற்றம்: பொதுமக்கள் கடும் அவதி

மயிலாடுதுறை: மயிலாடுதுறை நான்காம் நம்பர் புதுத்தெரு வழியாக வி.ஐ.பி. நகர் செல்லும் சந்திப்பில் உள்ள நகராட்சி எல்லையில் மயிலாடுதுறை நகராட்சி பணியாளர்கள் குப்பைகளை சேகரித்த வாகனத்துடன் சென்று குப்பை மற்றும் கழிவுகளை கொட்டுகின்றனர். தற்போது மழை ெபய்து வருவதால் அப்பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று நோய்க் கிருமிகளும் பரவ வாய்ப்பு உள்ளது. கொசு தொல்லையும் அதிரித்துள்ளது. இந்த குப்பை கழிவுகளில் உள்ள இறைகளைத்தேடி பன்றிகள் கூட்டம் கூட்டமாக வந்து கிளறுகின்றன. பன்றிகளின் தொல்லை தாங்க முடியாமல் அப்பகுதி மக்கள் பெரிதும் தொல்லையை அனுபவிக்கின்றனர்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் பாலு வசம் அப்பகுதியினர் மனு கொடுத்துள்ளனர். வழக்கம்போல் மனுவை வாங்கி வைத்து கொண்டதுடன் சரி, எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. குப்பை கொட்டும் பணி மட்டும் தொடர்கிறது. நிரந்தரமாக இப்பகுதியில் குப்பைகளைகொட்டுவதை தவிர்க்க நடவடிக்கை நகராட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும், நகரப்பகுதிகளில் நகராட்சி நிர்வாகத்தினர் கடந்த வாரம் ஆக்கிரமிப்பு முழுவதும் அகற்றப்படும் என்று அறிவித்துவிட்டு, அகற்றுவதுபோல் போக்கு காட்டி அப்படியே விட்டுவிட்டனர்.

அதே போல நகராட்சி நிர்வாகம் அரைகுறை நடவடிக்கை எடுப்பதை தவிர்த்துவிட்டு முழுமையாக குப்பைகளை அகற்றவும், மீண்டும் அப்பகுதியில் குப்பைக்கொண்டுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: