மாவட்ட அளவிலான வில்வித்தை போட்டி

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் மாவட்ட வில்வித்தை சங்கம் சார்பாக மாவட்ட அளவிலான வில்வித்தை போட்டிகள் நடந்தது. திண்டுக்கல் அருகே உள்ள கொத்தம்பட்டி தனியார் பள்ளியில் நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வில்வித்தை சங்கத் தலைவர் ஜோதி முருகன் தலைமை வகித்தார். திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ் பாத்திமா மேரி முன்னிலை வகித்தார். இந்த வில்வித்தை போட்டியில் 9 வயது முதல் அனைத்து வயதினரும் கலந்து கொண்டனர்.

இதில் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்கள் சென்னையில் வருகின்ற 25 முதல் 30ம் தேதி வரை நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள். ஏற்பாடுகளை மாவட்ட வில்வித்தை சங்கச் செயலாளர் சீத்தாராமன், துணைச் செயலாளர் ராஜேஸ்வரி ெசய்திருந்தனர்.

Related Stories:

More
>