17 அமெரிக்கர்கள் ஹைதியில் கடத்தல்: ரூ.75 கோடி கேட்டு மிரட்டல்

சான் ஜூவான்: ஹைதி நாட்டில் அமெரிக்காவை சேர்ந்த 17 பேரை தீவிரவாத கும்பல் கடத்தி உள்ளது. உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள ஹைதி நாட்டில் உள்ள அனாதை இல்லத்துக்கு  அமெரிக்காவை சேர்ந்த மத அமைப்பை சேர்ந்தவர்கள், தங்கள் குடும்பத்துடன் சமீபத்தில் சென்றனர். அந்த இல்லத்தில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவர்களை மர்ம கும்பல் துப்பாக்கி முனையில் வழிமறித்து கடத்தி சென்றது. ஹைதியை சேரந்்த கிறிஸ்தவ அமைப்பு, இந்த கடத்தல் குறித்து பல்வேறு அமைப்புகளுக்கு குரல் குறுஞ்செய்தியின் மூலம் தகவல் அனுப்பியுள்ளது.

ஒரு நிமிடம் ஓடும் இந்த செய்தியில், ‘ஹைதியில் அமெரிக்காவை சேர்ந்த குழந்தைகள் உட்பட 17 மத அமைப்பினர் கடத்தப்பட்டுள்ளனர். அவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தியுங்கள்,’ என கூறப்பட்டுள்ளது. இவர்களை விடுவிக்க, ரூ.75 கோடி கேட்டு கடத்தல் கும்பல் மிரட்டல் விடுத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த ஜூலை 7ம் தேதி இந்நாட்டு அதிபர் ஜொவினெல் மொய்சேவை வெளிநாட்டு கூலிப்படை வீடு புகுந்து சுட்டுக் கொன்றது. இதைத் தொடர்ந்து அங்கு, இதுபோன்ற கடத்தல்கள் அதிகரித்துள்ளன.

ஹைதியில் கடந்த 8 மாதங்களில் 328 கடத்தல் சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. கடந்த 2020ம் ஆண்டில் 234 கடத்தல்கள் நடந்தன.

Related Stories:

More
>