திருமணம் செய்வதாக கூறி பலாத்காரம் குழந்தை பெயரில் ரூ.5லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மலைச்சாமி. தனது வீட்டருகே ஒரு பெண்ணை காதலித்து வந்தார். மேலும், திருமணம் செய்வதாக கூறி அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் அந்தப் பெண் கர்ப்பமானதும், மலைச்சாமி திருமணம் செய்ய மறுத்துள்ளார். வழக்கு பதிந்த போலீசார், மலைச்சாமியை கைது செய்தனர். இதனிடையே அந்தப் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த வழக்ைக விசாரித்த ராமநாதபுரம் மகளிர் விரைவு நீதிமன்றம், மலைச்சாமிக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை, ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து கடந்த 2015ல் தீர்ப்பளித்தது.  

இதை எதிர்த்து மலைச்சாமி, ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.பொங்கியப்பன் பிறப்பித்த உத்தரவு: சட்டத்தின் முன் மனுதாரர் குற்றவாளி என்பதை விட சிறு குழந்தையின் எதிர்காலத்தை பார்க்க வேண்டியுள்ளது. மனுதார ருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. குழந்தைக்கு இழப்பீடாக ரூ.5 லட்சத்தை விசாரணை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும். இந்தப் பணத்தை தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் குழந்தையின் பெயரில் டெபாசிட் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: