ஆப்கான் டிரோன் தாக்குதலில் 10 அப்பாவிகள் பலி அறியாமல் செய்த தவறுக்கு பரிகாரம் தேடும் பைடன்: அமெரிக்காவில் வாழ வீடு, நிதியுதவி

வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் வாபஸ் பெறப்பட்டது. அப்போது, காபூல் விமான நிலையம் அருகே தீவிரவாதிகள் காரில் தப்பி செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ஆகஸ்ட் 29ம் தேதி அமெரிக்க ராணுவம் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில், அகமதி என்பவரின் குடும்பத்தை சேர்ந்த 7 குழந்தைகள் உள்பட 10 பேர் கொல்லப்பட்டனர்.

இவர்கள் அப்பாவிகள் என்பதை அறிந்த அமெரிக்க ராணுவம், பகிரங்க மன்னிப்பு கேட்டது.  இந்நிலையில், டிரோன் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை அமெரிக்கா அழைத்து வந்து குடியமர்த்த, அதிபர் பைடன் நிர்வாகம்  ஆப்கானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அவர்கள் குடும்பங்களுக்கு கருணைத் தொகை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பென்டகன் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories:

More
>