உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24.08 கோடியை தாண்டியது: 49.04 லட்சம் பேர் உயிரிழப்பு.: உலக சுகாதார நிறுவனம் தகவல்

சீனா: சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை உலுக்கி வருகிறது. தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்டாலும் கூட தொற்றின் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து பல அலைகளாக தாக்கத்தொடங்கியுள்ளது. இதனால், உலக நாடுகள் விழி பிதுங்கி நிற்கின்றன. தற்போதைக்கு தடுப்பூசியால் மட்டுமே கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறிவருவதால், தடுப்பூசி போடும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

டெல்டா வகை கொரோனா பரவலால் ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் தொற்று பரவல் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. உலகம் முழுவதும் இதுவரை 240,823,577 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 4,904,650 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 218,076,826 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 17,842,101 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 17,762,579 பேர் லேசான தொற்று அறிகுறிகளுடனும், 79,522 பேர் கவலைக்கிடமான நிலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: