சொத்து பிரச்னையில் முதியவர் கொலை?

பெரம்பூர்: அயனாவரம் பழனி ஆண்டவர் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மகாதேவன்(75), இவருக்கும் இவரது தம்பி மகனான மோகன்ராஜ்(42) என்பவருக்கும் அயனாவரம் பழனி ஆண்டவர் கோயில் தெரு பகுதியில் உள்ள வீடு சம்பந்தமாக சொத்து பிரச்னை இருந்து வந்துள்ளது. கடந்த 11ம் தேதி காலை மகாதேவன் வீட்டின் மேற்கூரை பழுதடைந்து விட்டதாக கூறி மோகன்ராஜிடம் வீட்டை காலி செய்யுமாறு கூறி உள்ளார். இதனால் இவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மோகன்ராஜ் மகாதேவனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புகாரின்படி அயனாவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories:

More
>