மின் உற்பத்தியை அதிகரிக்க மாநிலங்களுக்கு 20க்குள் 1.9 கோடி டன் நிலக்கரி: ஒன்றிய அமைச்சர் உறுதி

பிலாஸ்பூர்: ‘மின் உற்பத்தியை அதிகரிக்க வரும் 20ம் தேதிக்குள் 1.9 கோடி கடன் நிலக்கரி சப்ளை செய்யப்படும்,’ என்று ஒன்றிய நிலக்கரி சுரங்கத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார். சட்டீஸ்கர் மாநிலம், பிலாஸ் விமான நிலையத்தில் இருந்து கோர்பா மாவட்டத்தில் உள்ள தென்கிழக்கு நிலக்கரி சுரங்கத்துக்கு சென்ற அமைச்சர் பிரகலாத் ஜோஷி, அங்கு அந்நிறுவனத்துக்கு சொந்தமான ஜேவ்ரா, திப்கா, குஸ்முண்டா சுரங்கங்களில் ஆய்வு நடத்தினார். பின்னர், அவர் அளித்த பேட்டி: நிலக்கரி பற்றாக்குறை தொடர்பாக அரசியல் செய்ய விரும்பவில்லை. ஒரு நாளைக்கு மின் உற்பத்திக்கு ஒரு கோடியே 10 லட்சம் டன் நிலக்கரி தேவைப்படும். ஆனால், ஏற்கனவே 2 கோடி டன் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. எனவே, பற்றாக்குறை என்ற பிரச்னைக்கே இடமில்லை. மேலும், நாட்டில் இதனால் மின் உற்பத்தி பாதிப்பும் ஏற்படாது. வரும் 20ம் தேதிக்கு பிறகு மின் உற்பத்தி நிலையங்களுக்கு 1.9 கோடி டன் நிலக்கரி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: