தொடர் மழையால் தண்ணீர் வரத்து அதிகரிப்பு: குமரி அணைகளில் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு

குலசேகரம்: குமரியில் தொடர் மழை காரணமாக அணைகளில் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. அணைகளில் இருந்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து உள்ளன. அணைகளுக்கு மழைகளில் இருந்து வரும் நீரோடைகள், ஆறுகள் அனைத்திலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர்ச்சியாக அடை மழை பெய்து வந்த நிலையில் நேற்று மழை சற்று தணிந்துள்ளது.

சில இடங்களில் மட்டும் சாரல் மழை பெய்தது. மலை மற்றும் மலையோர பகுதிகளில் ஓரளவு மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு வரும் தண்ணீர் அளவு சீராக உள்ளது. 18 அடி கொண்ட சிற்றார் 1 அணையின் நீர்மட்டம் 16.04 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு 278 கன அடி தண்ணீர் வந்து கெண்டிருக்கிறது. 18 அடி கொண்ட சிற்றார் 2 அணையின் நீர்மட்டம் 16.14 அடியாக உள்ளது. அணைக்கு  13 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து 3 நாட்களாக இந்த அணைகளில் இருந்து மறுகால் திறந்து விட்டதால், நேற்று முதல் மறுகால் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது.

 இதுபோல் 77 அடி கொண்ட பெருஞ்சணி அணையின் நீர்மட்டம் 2 நாட்களுக்கு முன் 72 அடியை தொட்டது. நேற்று அணைக்கு தண்ணீர் வரும் பகுதியில் கனமழை பெய்ததால் அணைக்கு அதிகளவு தண்ணீர் வந்தது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 74.50 அடியாக இருந்தது அணைக்கு வினாடிக்கு 1122 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 500 கனஅடி தண்ணீர் பாசன  கால்வாய் வழியாக வெளியேற்றப்படுகிறது. கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது முக்கிய அணையான 48 அடி கொண்ட பேச்சிப்பாறையின் நீர்ட்டம் இன்று காலை நிலவரப்படி 43.70 ஆக உள்ளது. அணைக்கு 1746 ஆக கன அடிதண்ணீர் வந்து கொண்டிருந்தது.

அணையில் இருந்து 1450 கன அடி தண்ணீர் மறுகால் ஷட்டர் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் இருந்த சில நாட்களாக மறுகாலில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கோதைய்ாற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளதால் திற்பரப்பு அருவி ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பரளியாறு, ேகாதையாறு, குழித்துறை தாமிரபரணி ஆகியவை செல்லும் பகுதியில், தொடர்ந்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று திற்பரப்பு அருவி பகுதியில் மழை அறிகுறி இல்லாமல் இருந்தது. காலையில வெயில் அடித்து வருகிறது. இருந்தும் தொடர் விடுமுறை இருப்பதால் பயணிகள் காலை முதலே  அருவியில் குளிக்க அனுமதி மறுத்தாலும், அருவியின் அழகை பார்க்க வந்த வண்ணம் .உள்ளனர்.

Related Stories: