ஈராக் தேர்தலில் 41% வாக்குப்பதிவு

பாக்தாத்: ஈராக்கின் நாடாளுமன்றத் தேர்தலில் மிகக் குறைந்த அளவாக 41 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது. ஈராக்கின் தெற்கு மாகாணங்களில், ஊழலுக்கு எதிராகவும் அரசியல் சீர்திருத்தங்களை வலியுறுத்தியும் இளைஞர்கள் கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் திட்டமிட்டதைவிட ஓராண்டுக்கு முன்னரே தேர்தலை நடத்த இந்நாட்டு தேர்தல் ஆணையம் ஒப்புக் கொண்டது. அதன்படி, நேற்று முன்தினம் அங்கு தேர்தல் நடந்தது. இதில் 41 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளன. அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஆட்சி நிர்வாகம் அடக்குமுறையைக் கையாண்டதால் தேர்தலை இளைஞர்கள் புறக்கணித்ததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. சதாம் ஹூசைன் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் 2003ல் இருந்து நடந்த தேர்தல்களில் இதுவே மிகக் குறைந்த வாக்கு எண்ணிக்கையாகும்.  பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அடுத்த 48 மணி நேரத்திற்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: