ரஷ்யாவில் விமான விபத்து பாராசூட் வீரர்கள் உட்பட 16 பேர் பலி

மாஸ்கோ: ரஷ்யாவில் 21 பாராசூட் சாகச வீரர்கள் உட்பட 23 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 16 பேர் உயிரிழந்தனர். 7 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவின் டாடர்ஸ்டான் பிராந்தியத்தில் 21 பாராசூட் சாகச வீரர்கள் உட்பட 23 பேருடன் எல்-410 விமானம் சென்று கொண்டிருந்து. மென்சிலின்சிக் என்ற இடத்தில்  விமானம் விபத்தில் சிக்கியது. விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. இது குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் அங்கு விரைந்தனர். விமானத்தில்  பயணம் செய்த 23 பேரில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 7 பேர் மீட்கப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. விபத்துக்கான காரணம் தெரியவில்லை. விபத்து குறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: