வெற்றியை நம்ப முடியவில்லை: விராட் கோஹ்லி பேட்டி

துபாய்: ஐபிஎல் தொடரில் துபாயில் நேற்று நடந்த லீக் சுற்றின் கடைசி போட்டியில் பெங்களூரு-டெல்லி அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன் எடுத்தது. பின்னர் களம் இறங்கிய பெங்களூரு 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 166 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி பந்தில் வெற்றிக்கு 5 ரன் தேவைப்பட்ட நிலையில், கர் பரத் சிக்சர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். அவர் 52 பந்தில் 78 ரன்னும், மேக்ஸ்வெல் 33 பந்தில் 51 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர்.

கர் பரத் ஆட்டநாயகன் விருது பெற்றார்.வெற்றிக்கு பின் கேப்டன் விராட் கோஹ்லி கூறுகையில், வெற்றியை நம்ப முடியவில்லை. நாங்கள் இழப்பதற்கு ஒன்றும் இல்லை. பட்டியலில் முதல் இடத்தில் உள்ள அணியை வெல்வது நன்றாக இருக்கிறது. இந்த சீசனில் 2 முறையும் டெல்லியை வென்றுள்ளோம். டிவில்லியர்ஸ், பரத், மேக்ஸ்வெல் சிறப்பாக பேட் செய்தனர். மேக்சி-பரத் பார்ட்னர் ஷிப் அற்புதமானது. தொடரில் அதிகம் நாங்கள் சேசிங் செய்யவில்லை. இந்த வெற்றி நம்பிக்கை அளிக்கிறது. பரத் சிறப்பாக ஆடுவதால் நம்பர் 3 பேட்டிங் ஆர்டர் ஒரு பிரச்னை இல்லை, என்றார்.

* ஐசிசி உலக கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணியின் இறுதி பட்டியல் நாளை வெளியாகலாம் என தெரிகிறது. இதில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அணியில் இருந்து  மாற்றம் செய்யப்படலாம். குறிப்பாக ஹர்திக் பாண்டியா, அஸ்வின் ஆகியோர் மோசமான பார்ம் காரணமாக கழற்றி விடப்படலாம் என கூறப்படுகிறது.

* ஐசிசி டி 20  உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டன் ஆண்டி பிளவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

* டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா, 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டியிலும் கிளாஸ் பார்டோனீட்ஸ் பயிற்சியாளராக தொடர விருப்பம் தெரிவித்துள்ளார். அண்மையில்அவரை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து சம்பளம் மற்றும் பயிற்சி முறைகள் உட்பட பல வேறுபாடுகளால் இந்திய தடகள கூட்டமைப்பு விடுவித்தது.

Related Stories: