தென்பெண்ணையில் நீர்வரத்து அதிகரிப்பு ஈச்சம்பாடி அணை நிரம்பியதால் தண்ணீர் திறக்க நடவடிக்கை

தர்மபுரி : தென்பெண்ணையாற்றில் நீர் வரத்து அதிகரிப்பால், கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு நிரம்பியது. இதையடுத்து, தண்ணீர் திறக்க அரசு பார்வைக்கு கொண்டு சென்றுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.கிருஷ்ணகிரி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 5 மாவட்டங்களுக்கு கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்ட தென்பெண்ணை அற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்ட எல்லையான இருமத்தூர், பெரமான்டப்பட்டி, தொட்டம்பட்டி, டி.அம்மாபேட்டை ஆற்றின் கரையோர கிராமங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றின் குறுக்கே உள்ள ஈச்சம்பாடி அணைக்கட்டு நிரம்பி, உபரிநீர் வெளியே சென்று கொண்டிருக்கிறது. தடையை மீறி மக்கள் ஆற்றில் குளிக்கின்றனர்.

வழக்கமாக 300 கன அடி தண்ணீர் ஆற்றில் வரும்போது, ஆற்றின் கரையொர கிராமங்களுக்கு தண்டோரோ போட்டு எச்சரிக்கை செய்யப்படும். ஆனால் இதுவரை எச்சரிக்கை செய்யவில்லை என்ற கிராமமக்கள் தெரிவித்துள்ளனர். தர்மபுரி கலெக்டர் திவ்யதர்சினி கூறுகையில், ‘தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பால், கே.ஈச்சம்பாடி அணைக்கட்டில் தண்ணீர் நிரம்பி உபரிநீர் வெளியே செல்கிறது.விவசாயிகள் வைத்த கோரிக்கையடுத்து கே.ஈச்சம்பாடி அணைக்கட்டில் தண்ணீர் திறக்க, தமிழக அரசு பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில் தண்ணீர் திறக்கப்படும்,’ என்றார்.

Related Stories: