ஆசிரம சீடர் கொலை குர்மீத் ராம் குற்றவாளி: அரியானா நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: அரியானா மாநிலம், சிர்சாவில் ‘தேரா சச்சா சவுதா’ என்ற ஆசிரமத்தை சாமியார் குர்மீத் ராம் ரகீம் சிங் நடத்தி வந்தார். இதில், பெண் சீடர்களை அவர்  பாலியல் பலாத்காரம் செய்தார்.  இந்த வழக்கில் குர்மீத்துக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, அதை அனுபவித்து வருகிறார். இந்நிலையில், ஆசிரமத்தில் ரஞ்சித் சிங் என்பவர் கொல்லப்பட்ட விவகாரத்தில், அரியானா நீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அதில், ரஞ்சித் சிங்கை கொன்ற வழக்கில் குர்மீத் ராம் ரகீம் சிங் உட்பட 5 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இவர்களுக்கான தண்டனை விவரம், வரும் 12ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

Related Stories: