அஜய் மிஸ்ரா ஒன்றிய அமைச்சரவையில் நீடிப்பது ஏன்?.. சாதாரண மக்களுக்கு நீதி கிடைப்பதில்லை என பிரியங்கா காந்தி வேதனை

லக்கிம்பூர்: அஜய் மிஸ்ரா ஒன்றிய அமைச்சரவையில் நீடிப்பது ஏன்? என பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். உத்தர பிரதேச மாநிலம், லக்கிம்பூரில் காரை ஏற்றி விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லக்கிம்பூர் சம்பவத்தை கண்டித்து, அரியானா மாநிலம், அம்பாலா மாவட்டத்தில் உள்ள நாராயண்கரில்  விவசாயிகள் நேற்று ஊர்வலம் சென்றனர். அப்போது, அம்பாலா பாஜ எம்பி நயாப் சைனியின் கார் இந்த ஊர்வலத்தில் வேகமாக புகுந்து இடித்ததில், விவசாயி ஒருவர் படுகாயம் அடைந்தார். அவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த ஒருவரான குல்விந்தர் சிங் குடும்பத்தினரை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; அஜய் மிஸ்ரா ஒன்றிய அமைச்சரவையில் நீடிப்பது ஏன்? என்றும் பிரதமருக்கு தார்மீக பொறுப்பு ஏதும் கிடையாதா என்றும் கேள்வி எழுப்பினார். அஜய் மிஸ்ரா அமைச்சர் பொறுப்பில் இருந்து இதுவரை நீக்கப்படாதது ஏன் என்றும் அதிகாரத்தில் இருப்பவர்கள் எதுவம் செய்ய்யலாம் என்பதேயே பிரதமர் நரேந்திர மோடியின் மவுனம் உணர்த்துவதாகவும், பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

உத்தரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கோ, ஜனநாயகமோ எதுவும் இல்லை என்று பிரியங்கா காந்தி குற்றம் சாட்டினார். பாஜக ஆட்சியில் சாதாரண மக்களுக்கு நீதி கிடைப்பதில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.

Related Stories: