கர்நாடக மாநிலம் மைசூரில் உலக புகழ்பெற்ற தசரா திருவிழா கோலாகல தொடக்கம்!: சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை..!!

பெங்களூரு: கர்நாடக மாநிலம் மைசூரில் தசரா திருவிழாவை சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகளை செய்து முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தொடங்கி வைத்தார். உலக புகழ்பெற்ற மைசூரு தசரா திருவிழா ஆண்டுதோறும் வெகுசிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் 411ம் ஆண்டு மைசூரு தசரா விழாவை முன்னாள் முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணா, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை முன்னிலையில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து துவக்கி வைத்தார்.

கொரோனா பரவல் காரணமாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க 400 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. மைசூருவில் தசரா விழா தொடங்கியதை தொடர்ந்து அரண்மனை வளாகத்தில் மாலையில் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில் கலந்துக் கொள்ளும் அதிகாரிகள், கலைஞர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்றும் ஒரு டோஸ் தடுப்பூசியாவது கட்டாயம் செலுத்தி இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மைசூரு அரண்மனைக்கு வருவதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: