தொண்டியில் சாலையில் ஆடு, மாடுகள் உலா-விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

தொண்டி : கிழக்கு கடற்கரை சாலை தொண்டி பகுதியில் அதிகளவில் கால்நடைகள் திரிகின்றன. இதனால் அடிக்கடி விபத்து நடக்கிறது. பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கிழக்கு கடற்கரை சாலையில் தொண்டியில் செக் போஸ்ட், பாவோடி மைதானம், வட்டாணம் ரோடு, புது பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் ஆடு, மாடுகள் கூட்டமாக நிற்கின்றன. இரவு நேரங்களில் இருள் சூழ்ந்த பகுதியில் படுத்துக் கொள்வதால் அடிக்கடி விபத்தும் நடக்கிறது.

கடந்த காலங்களில் ரோட்டில் திரியும் மாடுகளை பேரூராட்சி நிர்வாகம் பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தது. கடந்த சில வருடங்களாக  இப்பணி நடைபெறாததால் மீண்டும் ஆடு மாடுகள் ரோட்டில் திரிகின்றன. இதனால் விபத்து ஏற்படுகிறது. எனவே பேரூராட்சி நீர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இது குறித்து தொண்டி ஜிப்ரி கூறுகையில், தொண்டி முழுவதும் ரோட்டில் எங்கு பார்த்தாலும் ஆடு, மாடு திரிகிறது. டூவீலரில் வருவோர் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். ரோட்டில் திரியும் மாடுகளை பிடித்து உரிமையாளர்களுக்கு கடும் அபராதம் விதிக்க வேண்டும். அதற்கு உரிய நடவடிக்கையை பேரூராட்சி நிர்வாகம் எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: