சென்னை: ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தின் பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. ரஜினி பட பாடல் என்பதாலும், மறைந்த இசை வித்தகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் கடைசி பாடல் என்பதாலும், இந்த பாடல் வெளியீட்டிற்காக மக்கள் மகிழ்ச்சியும், சோகமும் கலந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். இந்நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் டி.இமான் இசையில் உருவான அண்ணாத்த படத்தின் முதல் பாடல் நேற்று மாலை ரசிகர்களுக்கு வெளியிடப்பட்டது. அண்ணாத்த என தொடங்கும் பாடலை மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். பாடல் வெளியான 20 மணி நேரத்தில் 33 லட்சம் பேர் அண்ணாத்த பாடலை பார்த்துள்ளனர்.