விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளை ஊக்குவிக்க வேண்டும்: நபார்டு தலைவர் வலியுறுத்தல்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் பிசிசிஐ சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இணையவழி கருத்தரங்கில் நபார்டு தலைவர் சிந்தலா கலந்து கொண்டு கூறுகையில், ‘ இந்திய விவசாயத்தில் விவசாயி உற்பத்தியாளர் அமைப்பு புதிய முன்னுதாரணமாகும். ஏறத்தாழ 10000 விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்புக்கள் உள்ளன. இவற்றில் 5 ஆயிரம் அமைப்புக்கள் நபார்டால் ஊக்குவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 2500 அமைப்புக்கள் முதலீடு தரத்துக்கு உயர்ந்துள்ளன. இந்த முதலீட்டு தர விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் வங்கிகள் மற்றும் நப்கிசான் பினான்ஸ் உள்ளிட்டவற்றிடம் இருந்து பணத்தை பெறுகின்றன.   பருப்பு உள்ளிட்ட பொருட்களை தயாரிப்பதன் மூலமாக இந்த அமைப்புக்கள் கூடுதல் மதிப்பை பெறத்தொடங்கியுள்ளன.   விவசாயிகள் 40 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை கூடுதல் நன்மைகளை பெறுகிறார்கள்.எனவே இந்த அமைப்புக்களை ஊக்குவிக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: