கொரட்டூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்: ஊராட்சி துறை இயக்குனர் பங்கேற்பு

திருவள்ளூர்: பூந்தமல்லி ஒன்றியம் கொரட்டூர் ஊராட்சியில் காந்திஜெயந்தியை முன்னிட்டு ஊராட்சி தலைவர் ஏ.கந்தபாபு தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றியக்குழு தலைவர் பூவை எம்.ஜெயக்குமார் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குனர் பிரவீன் பி.நாயர் கிராம வளர்ச்சி குறித்து கலந்துரையாடினார். இதில் கூடுதல் இயக்குனர் ஜெ.சம்பத், மாவட்ட திட்ட இயக்குனர் வை.ஜெயக்குமார், செயற்பொறியாளர் வ.ராஜவேல், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் சாவித்திரி, மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் டி.தேசிங்கு, ஒன்றிய ஆணையர் ஜி.பாலசுப்பிரமணி, ஒன்றிய துணைத்தலைவர் பரமேஸ்வரி கந்தன், ஊராட்சி துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். கிராமசபை கூட்டத்தில் பொது சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், மழைநீர் சேகரிப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஊராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகள் முன்னேற்றம் உள்பட பல்வேறு தீர்மானங்கள் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டு கலந்துரையாடல் நடைபெற்றது.

Related Stories: