சட்ட போராட்டம் மட்டும் போதாது; உயிர்கொல்லி நீட் தேர்வுக்கு எதிராக மக்கள் போராட்டமும் வெடிக்கட்டும்: கி.வீரமணி வலியுறுத்தல்

தஞ்சை: திக தலைவர் கி.வீரமணி தஞ்சையில் நேற்று அளித்த பேட்டி: உயிர்கொல்லி நீட் தேர்வால் தமிழகத்தில் இதுவரை 18 பேர் பலியாகி உள்ளனர். நீட் தேர்வை ஒழித்து விடுவதாக முதல்வர் கூறினாரே. இன்னும் ரத்து செய்யவில்லையே என கேள்வி வருகிறது. ஒன்றிய அரசிடம் போராடி தான் திரும்ப பெற செய்ய வேண்டும். சட்ட ரீதியாக நமக்கு வாய்ப்புகள் இருக்கின்றன. கடந்த முறையும் மசோதாக்கள் அனுப்பியும் அதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் கொடுக்கவில்லை. கடந்த முறை அதிமுக ஆட்சியில் இருந்தபோது, அவர்கள் கொண்டு வந்த 2 மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டதை ரகசியமாக வைத்து விட்டனர்.

இப்போது நிறைவேற்றப்பட்ட மசோதாவில் ராஜன் குழு அறிக்கையை பெற்று, அதன் பரிந்துரையின்படி இச்சட்டம் நிறைவேற்றப்படுகிறது என கூறியுள்ளனர். எனவே இதை எளிதாக நிராகரித்துவிட முடியாது. இது ஒரு சட்ட போராட்டம். இது போதாது, மக்கள் போராட்டமாக எழுச்சி பெற வேண்டும். நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சியினரும், மாணவர்களும், பெற்றோர்களும் முன் வந்துள்ளனர். அடுத்து நாடு தழுவிய அளவில் எழுச்சி போராட்டம் வரும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: