சென்னை மாணவரின் விழிப்புணர்வு தொடர் ஓட்டம்: கன்னியாகுமரியில் அமைச்சர் துவக்கி வைத்தார்

நாகர்கோவில்: காந்தி பிறந்தநாளை முன்னிட்டு நிலையான வளர்ச்சி இலக்குகள் விழிப்புணர்வு தொடர் ஓட்டத்தை சென்னை சாய்ராம் மெட்ரிக் பள்ளி மாணவர் மாஸ்டர் சர்வேஷ் கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபம், திருவள்ளுவர் சிலையில் இருந்து தொடங்கி சென்னை நோக்கி புறப்பட்டார். இவர் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கி, தென் இந்தியாவின் முக்கிய பகுதிகளின் வழியாக 10 நாட்களில் 750 கிமீ தனது தொடர் ஓட்டத்தின் முடிவில் தமிழகத்தின் தலைநகரான சென்னையை அடைகிறார். இவரது நிலையான வளர்ச்சி இலக்குகள் விழிப்புணர்வு தொடர் ஓட்டத்தை தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கன்னியாகுமரியில் இன்று காலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அப்போது அமைச்சர் மனோதங்கராஜ் கூறியதாவது: வளர்ச்சிக்கான இலக்குகள் என்ற 17 அம்சங்களை வைத்து உலக நாடுகள் சுற்றுச்சூழல் பாதிப்பில் இருந்து உலகத்தை பாதுகாக்க வேண்டும் என்று முனைப்புடன் செயல்படுகிறது. நிலைத்த நீடித்த வளர்ச்சி இலக்குகளை பொதுமக்கள் மத்தியில் கொண்டுசெல்ல சென்னை சாய்ராம் பள்ளியின்   மாணவன் சர்வேஷ் தொடங்கி இருக்கிறார். இவர் பல விருதுகள், பரிசுகள் பெற்றவர். சென்னை வரை 750 கி.மீ. தூரம் மராத்தான் ஓட்டம் ஓட இருக்கிறார். இந்த உலகம் இருக்க வேண்டும் என்றால் அனைவரும் ஒரு சூழியல் குறித்த விழிப்புணர்வுடன் வாழ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: