100% வேலை வாய்ப்பு பெற்று தரும் ஆச்சார்யா பெங்களூர் பி-ஸ்கூல்

சென்னை: வெளி மாநிலங்களுக்கு சென்று படிக்க விரும்பும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ஆச்சார்யா பெங்களூர் பி-ஸ்கூல் நல்ல தேர்வாக இருக்கும என அக்கல்லூரி பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கணினி அறிவியல் துறையின் தலைவர் பிரவீன் குமார் கூறியதாவது:
பெங்களூரில் உள்ள எங்கள் ஆச்சார்யா பி-ஸ்கூல் சிறந்த கல்வி மற்றும் வேலைவாய்ப்பை பெற்றுத்தரும் வளாகமாக திகழ்கிறது. எங்கள் கல்லூரியில் பிபிஏ, பி.காம், பி.எஸ்சி, பிஏ உள்ளிட்ட 14 இளங்கலை மற்றும் எம்பிஏ, எம்சிஏ, எம்.காம் உள்ளிட்ட 4 முதுநிலை படிப்புகள் உள்ளன. இந்திய மாணவர்கள் மட்டுமல்லாமல், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், தான்சானியா உள்ளிட்ட சர்வதேச மாணவர்கள் பலரும் படித்து வருகிறார்கள். ஒவ்வொரு வருடமும் 100 சதவீதம் வேலை வாய்ப்பு பெற்று தரும் கல்லூரியாக சிறந்து விளங்குகிறோம். அதுபோல மாணவர்களுக்கு நவீன அறிவியல் உலகத்திற்கு ஏற்றாற்போல் தரமான சிலபஸ் தயாரிக்கப்பட்டு பாடம் நடத்தப்படுகிறது.

நவீன ஆய்வகங்கள், உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்கங்கள், உடற்பயிற்சி கூடம், கலை நிகழ்ச்சிக்கான தியேட்டர்கள், உயர்தர வசதிகள் கொண்ட தங்கும் விடுதிகள் என அனைத்தும் தரமான முறையில் வழங்கப்படுகிறது. வெளி மாநிலங்களுக்கு சென்று படிக்க விரும்பும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு நல்ல தேர்வாக எங்கள் கல்லூரி இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதுபோன்ற நல்ல கல்லூரிகளை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கு இந்த கண்காட்சி உதவியாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post 100% வேலை வாய்ப்பு பெற்று தரும் ஆச்சார்யா பெங்களூர் பி-ஸ்கூல் appeared first on Dinakaran.

Related Stories: