திருப்பதியில் பிரமோற்சவத்தின்போது அலிபிரி நடை பாதையில் அனுமதி

திருமலை: திருமலையில் உள்ள நாம கோபுரத்தில் இருந்து லட்சுமி நரசிம்ம சுவாமி  கோயில் வரை மேற்கூரை புனரமைக்கும் பணிகளை திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அதிகாரி ஜவகர் நேற்று  ஆய்வு செய்தார். அப்போது, அவர் பேசியதாவது: திருப்பதி அலிபிரியில் இருந்து திருமலை வரை நடைபாதையின் மேற்கூரை புனரமைப்பு பணிகள் நன்கொடையாளர்களின் உதவியுடன்  முடிக்கப்பட்டுள்ளது.

எனவே, அக்டோபர் 7ம் தேதி தொடங்கி 15ம் தேதி வரை நடக்கும் வருடாந்திர பிரமோற்சவத்தின்போது ஆன்லைன் மூலம் டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டும் மலைப்பாதை வழியாக பாதயாத்திரை செல்ல அனுமதிக்கப்படுவார்கள். புனரமைப்பு செய்யப்பட்டதால்  நடைபாதையில் பக்தர்கள் பாத யாத்திரை செய்ய வசதியாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார். 

Related Stories: