துபாய்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று துபாயில் நடக்கும் 43வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகள் மோதுகின்றன. கோஹ்லி தலைமையிலான பெங்களூரு 10 போட்டிகளில் 6 வெற்றி, 4 தோல்வி என 12 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. இன்று வெற்றி பெற்றால் பிளேஆப் சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ளும். கடைசி போட்டியில் மும்பையை வீழ்த்திய உற்சாகத்தில் களம் காண்கிறது. மேக்ஸ்வெல் கடந்த போட்டியில் ஆல்ரவுண்டராக ஜொலித்தார். இன்று அவர் 18 ரன் எடுத்தால் டி20 போட்டிகளில் 7ஆயிரம் ரன் இலக்கை அடைவார். மறுபுறம் ராஜஸ்தான் 10 போட்டிகளில் 4 வெற்றியுடன் 8 புள்ளி எடுத்து 7வது இடத்தில் உள்ளது.